கிசு கிசு

நாளொன்றுக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்வெட்டு

(UTV | கொழும்பு) –   நிலக்கரிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டால் எதிர்காலத்தில் ஒரு நாளைக்கு சுமார் 10 மணித்தியாலம் வரை மின்சாரம் தடைப்படும் எனவும், இதற்கு இலங்கை மக்கள் தயாராக வேண்டும் எனவும் இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர் சங்கத் தலைவர் அனில் ரஞ்சித் இந்துவர எச்சரித்துள்ளார்.

2022 ஒக்டோபருக்குள் இலங்கை மின்சார சபைக்கு போதுமான நிலக்கரி கையிருப்பு கிடைக்காவிட்டால், மின்சார உற்பத்தியைக் குறைக்க வேண்டியிருக்கும் என்றும் அவர் கூறினார்.

தற்போது நீர் மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் அனல் மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறப்படுவதாகவும், மழைக்காலம் முடிவடையும் போது இலங்கையில் நீர் மின் உற்பத்தியில் பாரிய சிக்கல்கள் ஏற்படும் எனவும் அவர் கூறினார்.

இதற்கிடையில், நுரைச்சோலை மின்நிலையத்தில் ஒரு ஜெனரேட்டர் பராமரிப்பு காரணமாக இயங்கவில்லை என்றும், நவம்பர் 2022க்குள் அதை தேசிய மின்கட்டமைப்பில் சேர்க்க முடியும் என இலங்கை மின்சார சபை நம்புவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Related posts

வெடிச் சம்பவத்தில் சமையல்கலை நிபுணர் சாந்தா மாயாதுன்ன உயிரிழப்பு

MV XPress Pearl அழிவுக்கு காரணம் இதுதான்

சந்திமால் – பியூமி : கொரோனா கொத்தணி?