உலகம்

நாளை 4 மாவட்டங்களுக்கு பொது விடுமுறை!

(UTV | கொழும்பு) –

வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு நாளை திங்கட்கிழமை பொதுவிடுமுறை என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள ‘மிக்ஜம்’ புயல் காரணமாக ஞாயிறு, திங்கட்கிழமை (டிச. 3, 4) சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட வடதமிழக மாவட்டங்களில் மிக கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவிக்கப்பட்டிருப்பதால், நான்கு மாவட்டங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு வங்கக் கடலில் உருவாகியுள்ள புயல் சின்னம் இன்று காலை புயலாக மாறியது. இதற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இது சென்னையிலிருந்து தென்கிழக்காக 310 கிலோ மீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.
இது தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வங்கக் கடலின் மேற்கு மற்றும் மத்தியப் பகுதியில் ஆந்திரம் மற்றம் தமிழகத்தை ஒட்டி டிசம்பர் 4ஆம் திகதி வந்தடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்த புயல் காரணமாக, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் அதிவேகக் காற்றுடன் அதி கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, தமிழக அரசு, சிறப்பு நிகழ்வாக டிசம்பர் 4ஆம் திகதி திங்கட்கிழமையை பொது விடுமுறை நாளாக அறிவித்துள்ளமை தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

அமெரிக்காவில் இதுவரையில் 72,271 உயிரிழப்புகள்

பிரிட்டன் பிரதமராக ரிஷி சுனக்

கட்டடமொன்றில் மோதி விமானம் விபத்து – கலிபோர்னியாவில் சம்பவம்

editor