உள்நாடு

நாளை 24 மணி நேர நீர் விநியோக தடை

(UTV| கம்பஹா )- கம்பஹா மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(13) காலை 8 மணி முதல் 24 மணி நேர நீர் விநியோக தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதன்படி பேலியகொடை, வத்தளை – மாபோலை நகர சபைக்கு உட்பட்ட பகுதிகளிலும், களனி பிரதேச சபையின் எந்தலை, எலக்கந்தை மற்றும் பல்லியாவத்தை ஆகிய பகுதிகளிலும் குறித்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் பியகம பிரதேச சபையின் மஹூருவில வீதி, விஜேராம மாவத்தை, கே.ரீ பெரேரா மாவத்தை, கோனவல, பமுனுவில மற்றும் பத்தலஹேனவத்த ஆகிய பகுதிகளில் இந்த நீர் விநியோக தடை அமுல்ப்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது

Related posts

சுனில் ஜயவர்தனவின் கொலை : சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

சனத் ஜயசூரியவின் பதவிக்காலம் நீடிப்பு

editor

முன்னாள் நீதவான் திலின கமகே விடுதலை