உள்நாடுகாலநிலை

நாளை முதல் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

நாளை (01) முதல் அடுத்த சில நாட்களுக்கு மாலை வேளைகளில் நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மத்திய, சப்ரகமுவ, மேல், தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், குருநாகல் மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டம் நிறைந்து காணப்படும்

இடியுடன் கூடிய மழை பெய்யும்போது தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும்.

அதற்கமைய, மின்னல் தாக்கங்களால் ஏற்படும் பாதிப்புக்களைக் குறைத்துக்கொள்ள பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

இஷாரா செவ்வந்தி தொடர்பில் தகவல் வழங்குபவருக்கு பரிசுத் தொகை வழங்கப்படும்

editor

எதிர்க்கட்சித் தலைவர் சஜித்துக்கும், அவுஸ்திரேலிய ஆளுநர் நாயகத்துக்கும் இடையே விசேட சந்திப்பு

editor

12 வயதுக்குட்பட்ட சிறுவர்களை விளம்பரங்களுக்கு பயன்படுத்த தடை – பிரதி அமைச்சர் ஹசங்க விஜேமுனி

editor