உள்நாடு

நாளை குறித்து தீர்மானிக்க ஆளும் கட்சியினர் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) – ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 2020ம் புதிய ஆண்டில் இன்று(02) முதல் தடவையாக ஜனாதிபதி செயலக அலுவலகத்தில் கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள எட்டாவது பாராளுமன்றத்தின் 4 ஆவது கூட்டத் தொடர் தொடர்பில் கலந்தாலோசிக்கவே இவ்வாறு கூடுவதாக பாராளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்திருந்தார்.

இதன்போது அவைத்தலைவர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவிகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தபடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

இலங்கையின் புதிய வீதி வரைபடம் 29 ஆம் திகதி வெளியீடு

ஒவ்வொரு வெள்ளியும் சுகாதார ஊழியர்களுக்கு எரிபொருள்

தற்போது அரச சேவையில் உள்ள பயிலுனர் பட்டதாரிகள் 26,000 பேருக்கான ஆசிரியர் நியமனம் தொடர்பான விசேட அறிவிப்பு