உள்நாடு

நாளைய ஹர்த்தாலுக்கு விஷேட மருத்துவர்கள் சங்கத்தின் ஆதரவு

(UTV | கொழும்பு) – நாளை (06) நடைபெறவுள்ள ஹர்த்தால் பிரச்சாரத்திற்கு ஆதரவு வழங்க விசேட வைத்தியர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

சாதாரண மக்களின் அசௌகரியங்களை குறைக்கும் வகையில் ஹர்த்தாலுக்கு ஆதரவளிப்பதாக தொழிற்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய தினம் அரசு மருத்துவமனைகள் வழக்கம் போல் செயல்படவும், அனைத்து அவசர சிகிச்சைகள் மேற்கொள்ளவும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

அன்றைய தினம் செனலின் சேவையில் இருந்து விலகி இருக்கவும் விசேட மருத்துவர்கள் சங்கம் தீர்மானித்துள்ளது.

Related posts

அரச வருவாயில் அதிகரிப்பு – இலங்கை மத்திய வங்கி

ஜோசப் ஸ்டாலினுக்கு விளக்கமறியல்

துப்பாக்கி, வாள்களுடன் பெண் கைது

editor