உள்நாடு

நாளையும் 7 1/2 மணித்தியால மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாட்டில் அனைத்து வலயங்களுக்கும் நாளைய தினமும் (03) சுழற்சி முறையில் 7 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்சார உற்பத்திக்கு தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் நாளைய தினமும் மின்துண்டிப்பை மேற்கொள்ள அனுமதி வழங்குமாறு இலங்கை மின்சார சபை விடுத்த கோரிக்கைக்கு அமைய இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை காலை 8.00 மணி முதல் 6.00 மணி வரையிலான காலப்பகுதியில் 5 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளது.

அத்துடன், இரவு வேளையில் 6.00 மணி முதல் 11.00 மணி வரையிலான காலப்பகுதியில் 2 மணித்தியாலங்களும் 30 நிமிடங்களும் மின்வெட்டு அமுல்படுத்தப்பட உள்ளதாக பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Related posts

கட்டுப்பாட்டை இழந்து கெப் வண்டி விபத்தில் சிக்கியது – இருவர் உயிரிழப்பு

editor

BWIO- USA சர்வதேச விருது: சிறந்த வளர்ந்து வரும் கல்வி நிறுவனமாக அமேசன் கல்வி நிறுவனம் தெரிவு

தவறான மருந்தை உண்ட நபர் மரணம்!