சூடான செய்திகள் 1

நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

ஜனவரி 30 ஆம் திகதி வரையில் அவரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 25 ஆம் திகதி அவர் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகிய சந்தர்ப்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தார்.

தொடர்ந்து 5 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் கைது செய்யப்பட்டிருந்தார்.

 

 

 

Related posts

கண்டியில் வன்முறைகள் இடம்பெற்ற பகுதிக்கு பிரதமர் விஜயம்

அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் விளக்கமறியலில்

ரஞ்சன் மீதான வழக்கு ஜூன் 18ம் திகதி விசாரணைக்கு