கிசு கிசு

நாமல் ராஜபக்ஷ மீண்டும் களத்தில்..

(UTV | கொழும்பு) – தற்போதுள்ள அரசாங்கத்தை கவிழ்த்து புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ முன்வைத்த யோசனையை அரசாங்கத்தில் இருந்து விலகிய பங்காளிக் கட்சிகள் நிராகரித்துள்ளன.

பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார ஊடாகவே இந்த பிரேரணை அக்கட்சிகளுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைவர்கள் இந்த பிரேரணையை நிராகரித்துள்ளதுடன், தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு ராஜபக்சக்களும் காரணம் என்பதால், அவர்களுடன் இணைந்து ஆட்சியமைக்க முடியாது என ஒன்பது கட்சிகளும் கருதுகின்றன.

இது தொடர்பில் நாமல் ராஜபக்சவுடன் எவ்வித கலந்துரையாடலும் நடத்துவதில்லை எனவும் கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளனர்.

Related posts

16 வயதில் கற்பழிக்கப்பட்ட மாடல் அழகி…

குரங்கு அமைச்சை கோரும் டிலான்

சர்வதேசத்திற்கு பயந்து ‘புர்கா’ தள்ளிப்போனதா?