உள்நாடு

“நான் நந்தலாலுக்காக வீட்டுக்குப் போகத் தயார்”

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் ஆளுனர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவை பதவி நீக்கம் செய்வது அவசியமானால் அவருக்காக பதவி விலகவும் தயார் என வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரி இன்று (2) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

அவரை நீக்கக் கூடாது எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டுச் சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் போதே திரு.அலி சப்ரி இவ்வாறு தெரிவித்தார்.

மத்திய வங்கி ஆளுநரின் பின்னால் குதிக்க வேண்டாம் என அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், தான் சொன்னதை நிறைவேற்றியவர்.

இது நல்லதொரு வரவு செலவுத் திட்டம் என்றும், நாட்டை கட்டியெழுப்புவதற்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அலி சப்ரி இதன்போது தெரிவித்தார்.

கடனை செலுத்தாத கறுப்புப் பட்டியலுக்கு இலங்கை சென்றுவிட்டதால், இன்று யாரும் நாட்டுக்கு கடன் வழங்க மாட்டார்கள் என தெரிவித்த வெளிவிவகார அமைச்சர், நாட்டின் பொருளாதார நெருக்கடி நேற்று ஏற்பட்டதல்ல எனவும் தெரிவித்தார்.

Related posts

அதிகளவான பிளாஸ்டிக் பொருட்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கைக்கு 14ஆவது இடம்!

நாட்டு மக்களுக்கு விஷேட உரையாற்றவுள்ள ஜனாதிபதி ரணில்!

எதிர்வரும் 17ம் திகதி முதல் முடக்கப்படும் இடங்கள்