சூடான செய்திகள் 1

நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அனர்த்த எச்சரிக்கை நீடிப்பு

(UTV|COLOMBO) – பதுளை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களில் விடுக்கப்பட்ட மண்சரிவு அனர்த்தம் தொடர்பான முன்னறிவிப்பு இன்று காலை 6.00 மணி தொடக்கம் மாலை 6.00 மணி வரையில் நீடிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 24 மணித்தியால காலப்பகுதிக்குள் இந்த பிரதேசங்களில் 75 மில்லிமீற்றருக்கும் இடைப்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என தேசிய கட்டட ஆய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. இதற்கு அமைவாக நிலம் தாழ் இறங்கல், மண் மேடு சரிந்து விழல், பாறைகள் புரளுதல் போன்ற மண்சரிவு அனர்த்த அடையாளங்கள் தொடர்பில் அவதானத்துடன் செயற்படுமாறு தேசிய கட்டட ஆய்வு அமைப்பு குறித்த பிரதேச மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

Related posts

ஞான­சார தேரரின் சிறை தண்டனையும், வழக்கின் விபரமும்

பா. உறுப்பினர் வீட்டுக்கு முன்னால் பொலிஸார்,விசேட அதிரடிப்படையினர் குவிப்பு

நாளைய மின்வெட்டு தொடர்பில் வெளியான தகவல்

editor