உள்நாடுபிராந்தியம்

நான்கு பேர் பயணித்த கெப்ரக வாகனம் வீதியை விட்டு விலகி விபத்தில் சிக்கியது

மஸ்கெலியா – ஹட்டன் பிரதான வீதியில் வனராஜா பகுதியில் நேற்று (04) மாலை மஸ்கெலியா காட்மோர பகுதியில் இருந்து கட்டுகஸ்தொட்ட நொக்கி சென்ற கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியது.

கெப் ரக வாகனத்தில் 3 பெண்கள் மற்றும் சாரதி அடங்கலாக நால்வர் பயணம் செய்து உள்ளனர்.

தெய்வாதீனமாக கெப் ரக வாகனம் மண் திட்டில் சரிந்து நின்றதால் எவருக்கும் காயங்கள் ஏற்பட வில்லை என்று ஹட்டன் பொலிஸ் நிலைய போக்குவரத்து அதிகாரி தெரிவித்தார்.

இப் பகுதியில் கன மழையுடன் பணி மூட்டம் காணப் படுவதால் இந்த கெப் ரக வாகனம் வீதியை விட்டு விலகி சென்று உள்ளது.

Related posts

வீதியில் பெருமளவான மனித எச்சங்கள் இருக்கலாம் – சட்டத்தரணி நிறஞ்சன்

மாலைத்தீவில் இருந்து நாடு திரும்பிய 169 இலங்கையர்கள்

பிணை முறி மோசடியாளர்கள் தண்டிக்கப்பட வேண்டும்