உள்நாடுபிராந்தியம்

நானுஓயாவில் வளர்ப்பு நாயை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் – இளைஞனுக்கு விளக்கமறியல்

நானுஓயாவில் வளர்ப்பு நாய் ஒன்றை கொடூரமாகத் தாக்கி, ஆற்றில் வீசிய சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்ட 17 வயது இளைஞனை, எதிர்வரும் செப்டம்பர் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நுவரெலியா மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டது.

நானுஓயா எடின்பரோ தோட்டத்தில் நடந்த இச்சம்பவத்தில், சந்தேகநபரான மோகனசுந்தரம் லக்ஷான் என்பவர் நேற்று (28) கைது செய்யப்பட்டு, விசாரணைகளுக்குப் பின்னர் இன்று (29) நுவரெலியா மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

நாயை சித்திரவதை செய்யும் காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-செ.திவாகரன்-

Related posts

கொரோனா : பலி எண்ணிக்கை 185 ஆக அதிகரிப்பு

மேலும் 10 அமைச்சர்கள் பதவியேற்பு

ரஞ்சன் ராமநாயக்க கைது [VIDEO]