உள்நாடுசூடான செய்திகள் 1

இலங்கையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை மூவாயிரத்தை தாண்டியது

(UTV|கொழும்பு) –  இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 3010 ஆக அதிகரித்துள்ளது

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இருந்து வந்த 10 பேர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளாகி பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2,860 ஆக அதிகரித்துள்ளது.

.

————————————————–[UPDATE]

நாட்டில் மேலும் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

(UTV|கொழும்பு) – நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 03 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அதன்படி, இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2,998ஆக அதிகரித்துள்ளது.

மாலைத்தீவில் இருந்து வருகைத் தந்த மூவருக்கே இவ்வாறு கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

எனக்கும், ஜீவன் தொண்டமானுக்கும் சொந்த பிரச்சினைகள் எதுவும் கிடையாது – பழனி திகாம்பரம் எம்.பி

editor

மாரவில கடற்கரையில் தலை, கை, கால்கள் இன்றி கரையொதுங்கிய சடலம்

editor

பரீட்சார்த்திகளுக்கு விடுக்கப்பட்ட முக்கிய அறிவிப்பு!