உள்நாடுகாலநிலை

நாட்டின் பல பகுதிகளில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை​!

நாட்டின் பல பகுதிகளில் இன்று (4) மாலை வேளையில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வடமத்திய, சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் 100 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

அதேநேரம் நாட்டின் பெரும்பாலான மாகாணங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

எனவே இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில், பலத்த மழைவீழ்ச்சி, பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

மேலும் தளர்வடைந்த ‘பயணத்தடை’

பொருளாதார, முதலீட்டு தொடர்புகளை பலப்படுத்த ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் இலங்கைக்கு இடையில் ஒப்பந்தம்

editor

பேராயர் ரஞ்சித் ஆண்டகை நீதிமன்றில் மனு தாக்குதல்!