உள்நாடு

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யக் கூடும்

(UTV | கொழும்பு) – நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மாவட்டத்திலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாடு முழுவதும், குறிப்பாக வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, ஹம்பாந்தோட்டை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது

Related posts

வீடியோ | தேர்தலுக்கு முன்னர் ஊழல்வாதிகளை இணைத்துக் கொள்ள போவதில்லை என்றார்கள் – இப்போது பேச்சுவார்த்தையில் ஈடுபடுகிறார்கள் – இம்ரான் எம்.பி

editor

ஆசிரியர் அதிபர் பிரச்சினையை அடுத்த 3 மாதங்களிற்குள் தீர்க்கவும் – பிரதமர் ஹரிணி

editor

கடலில் இருந்து எங்களைக் காப்பாற்றிய இலங்கைக்கு நன்றி – தரையில் உயிரிழக்க விடப்பட்டுள்ளோம் – ஐ நா அலுவலகத்திற்கு முன்னால் ரோஹிங்யா அகதிகள் ஆர்ப்பாட்டம்

editor