வகைப்படுத்தப்படாத

நாட்டின் பல பகுதிகளில் மழை

(UTV|COLOMBO)-நாட்டின் பல பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என காலநிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

இதனிடையே தெற்கு அந்தமான் தீவிற்கு ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வுநிலை தொடர்ந்து அதிகரித்து வருவதாக அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

இதனால் நாளை முதல் நாட்டின் ஊடாக மற்றும் நாட்டை சுழவுள்ள கடற்பகுதிகளில் காற்றின் வேகம் அதிகரிக்க கூடும்.

விசேடமாக வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு கடல் பகுதிகளில் இந்த நிலை பொதுவாக காணப்படும் என அந்த நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது.

மேலும் இன்றைய தினம் வடக்கு, கிழக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லி மீட்டருக்கும் அதிகளவான மழை பெய்யக்கூடும் என காலநிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

வர்த்தக நிலையம் ஒன்றில் தீ பரவல்

மணல் புயல் காரணமாக சீனாவில் கடும் பாதிப்பு

Manmunai North Secretarial Division emerge champions