உள்நாடு

நாட்டின் பல பகுதிகளிலும் மழை பெய்யக்கூடிய சாத்தியம்

(UTV | கொழும்பு) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்தவகையில் மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் சிறிதளவான மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் சில இடங்களில் மாலை வேளையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அந்த பிரதேசங்களில் தற்காலிகமாகப் பலத்த காற்றும் வீசக்கூடும்.

மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

Related posts

வீடியோ | “ஜனநாயகத்தை விலைபேசும் உள்ளூராட்சி தேர்தல் முறைய மாற்ற வேண்டும்” – ரிஷாட் எம்.பி

editor

இன்று நள்ளிரவு முதல் ரயில் சேவையினை இரத்து செய்வது தொடர்பில் அவதானம்

ஐரோப்பிய ஒன்றிய இராஜதந்திரக் குழவினர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்தனர்

editor