சூடான செய்திகள் 1

நாட்டின் சில இடங்களில் மழையுடன் கூடிய காலநிலை

(UTVNEWS|COLOMBO) – நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மாலை வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்கு சாத்தியம் உயர்வாகக் காணப்படுகின்றதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

வடமத்திய, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் 75-100 மி.மீஅளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

மின்னல் தாக்கங்களினாலும் பலத்த காற்றினாலும் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகளில் மாலையில் அல்லது இரவில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

Related posts

சிறு பிள்ளைத்தனமாக நடந்து கொள்ளாமல் பக்குவமாக செயற்படவும் – சாகர, சஜித்திடம் வலியுறுத்தல்

இன்று நள்ளிரவு முதல் பாண் விலை அதிகரிப்பு

ரங்கே பண்டாரவின் மகன் செலுத்திய வாகனம் விபத்து