உள்நாடு

நாட்டினை வந்தடையவுள்ள மேலும் இரு டீசல் கப்பல்கள்

(UTV | கொழும்பு) –  டீசலை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் இன்றும்(02) நாளையும்(03) நாட்டை வந்தடையவுள்ளன.

இவற்றில் ஒரு கப்பலில் 33,000 மெட்ரிக் தொன் ஒட்டோ டீசலும் (Auto Diesel) 7,000 மெட்ரிக் தொன் சூப்பர் டீசலும் (Super Diesel) உள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா தெரிவித்தார்.

மற்றைய கப்பலில் 28,000 மெட்ரிக் தொன் டீசல் (Diesel) மற்றும் 9,000 மெட்ரிக் தொன் விமானத்திற்கான எரிபொருள் ( Jet Fuel) காணப்படுவதாகவும் அமைச்சின் செயலாளர் நாயகம் கூறினார்.

குறித்த கப்பல்களுக்கான கடன் கடிதங்களை தயார்ப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.

எண்ணெயை ஏற்றிய மேலும் இரு கப்பல்கள் எதிர்வரும் 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் நாட்டை வந்தடையவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் செயலாளர் கே.டி.ஆர். ஓல்கா குறிப்பிட்டுள்ளார்.

Related posts

WhatsApp இற்கு புதிய வசதிகள்

ஜனாதிபதி அநுரவுக்கு அவசர கடிதம் அனுப்பிய இலங்கை சட்டத்தரணிகள் சங்கம்

editor

தபால் ஊழியர்கள் இன்று முதல் மேலதிக நேர பணிப்புறக்கணிப்பில்