சூடான செய்திகள் 1

நாடு முழுவதும் காற்றுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-நாடு முழுவதும் காணப்படும் மழையுடனான வானிலையும் காற்று நிலைமையும் இன்றும் தொடரும் சாத்தியம் காணப்படுகின்றது.

மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் களுத்துறை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

சில இடங்களில் 75 மி.மீ அளவான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது. வடமேல் மாகாணத்திலும் கொழும்பு, கம்பஹா மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

ஏனைய பிரதேசங்களில் பல தடவைகள் சிறிதளவில் மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாடு முழுவதும், குறிப்பாக மத்திய, வடமேல், வடமத்திய, வடக்கு, கிழக்கு மற்றும் மேல் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]
 

 

 

Related posts

ஶ்ரீ.சு.கட்சி – ஶ்ரீ.பொ.முன்னணி இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் நாளை கைச்சாத்து

அக்குரணை வெள்ளப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு விரைவில்…

பொலிஸ் மா அதிபரின் பிரச்சினை உடனடி தீர்வு காணுமாறு ஜனாதிபதிக்கு கடிதம்!