உள்நாடு

நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு புதிய கட்டுப்பாடு இல்லை

(UTV | கொழும்பு) – வெளிநாடுகளில் இருந்து இலங்கையர்கள் மீண்டும் நாட்டிற்கு வரும் போது தனிப்பட்ட பயன்பாட்டிற்காக கொண்டு வரும் பொருட்களுக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப்படவில்லை என நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கை மத்திய வங்கியினால் 623 பொருட்கள் இறக்குமதி செய்வதற்கு நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது. இதனை சில நபர்கள் தவறாக புரிந்து கொண்டுள்ளதாக சிலர் வெளியிடும் கருத்துக்களின் மூலம் தெரியவருவதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

தாங்கள் மீண்டும் நாட்டிற்கு வரும் போது முன்பு போன்று டொபி, சொக்கலட் போன்ற உணவு வகைகளும் தொலைக்காட்சி போன்ற இயந்திரங்களும் கொண்டுவர முடியாதா என வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இது போன்ற பல்வேறு கேள்விகளை சமூக வலைத்தளங்கள் காண முடிவதாக நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு கொண்டு வரப்படும் பொருட்களுக்காக முன்னர் காணப்பட்ட நடைமுறைகளை தவிர்த்து எவ்வித தடைகளும் வதிக்கப்படவில்லை என நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று முதல் திரையரங்குகள் மீண்டும் திறப்பு

காணாமல் போனதாக கூறப்பட்ட மாணவன் கண்டுபிடிப்பு

இலங்கைக்குள் நீர்மூழ்கி கப்பல்கள்- அமெரிக்காவின் அவசர உதவியை நாடும் இலங்கை