உள்நாடு

நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் இன்று தீர்மானம்

(UTV | கொழும்பு) – நாடாளுமன்ற அமர்வு தொடர்பில் தீர்மானம் மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழு இன்று (13) ஒன்று கூடவுள்ளதாக நாடாளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

இதன்படி சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று பிற்பகல் 2.30 அளவில் நாடாளுமன்ற தெரிவுக்குழு ஒன்று கூடவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அடுத்தவாரம் நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படவுள்ள தினம் மற்றும் அதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார நடைமுறைகளை பின்பற்றி ஒருநாள் அல்லது இரண்டு நாட்கள் நாடாளுமன்ற அமர்வை நடத்துவதற்கு முன்னதாக திட்டமிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

Related posts

இம்முறை சிங்கள மொழி மூலம் மட்டுமே தேசிய கீதம் [VIDEO]

பொய் சொல்லிய இந்த திசைகாட்டி தரப்பினர் இப்போது கிராமத்து அதிகராத்தையும் கோருகின்றனர் – சஜித் பிரேமதாச

editor

சர்ச்சைக்குள்ளாகும் களனி பல்கலைக்கழக மாணவர் உயிரிழந்த சம்பவம்!