உள்நாடு

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பிள்ளையானுக்கு அனுமதி

(UTV|கொழும்பு) – முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சி.சந்திரகாந்தன் (பிள்ளையான்) நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு சிறைச்சாலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் சி.சந்திரகாந்தன் சிறையில் இருந்து போட்டியிடுவதற்காக சிவில் நீதிமன்றில் அனுமதியைக் கோரியிருந்தார். இதனையடுத்து இன்று சிவில் நீதிமன்ற நீதிபதி டி.எஸ்.சூசைதாஸ் வழக்கை பரீசிலனைக்கு எடுத்து கொண்டார்.

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இன்று முதல் வரும் 19ஆம் திகதி வரையான காலத்திற்குள் வேட்பு மனுத்தாக்கலை செய்வதற்காக அனுமதியை வழங்கியதுடன் இந்த வேட்பு மனுத் தாக்குதலை சிறைச்சாலையில் மேற்கொள்ளுமாறும் அதற்கான உரிய நடவடிக்கையை சிறைச்சாலை அத்தியட்சகர் மேற்கொள்ளுமாறும் சிறைச்சாலை அத்தியட்சகருக்கு நீதிபதி கட்டளை பிறப்பித்துள்ளார்.

Related posts

மக்காவிலிருந்து வந்த மெளலவியின் உடமையில் இருந்த கோடி ரூபா பெறுமதியான தங்கம்!

MSC Messina கப்பலில் பரவிய தீ கட்டுப்பாட்டில்

ஜனாதிபதியின் பணிப்புரைக்கு அமைய கொழும்பு மற்றும் கம்பஹாவிற்கு சமையல் எரிவாயு