உள்நாடுசூடான செய்திகள் 1

நாடளாவிய ரீதியில் மீளவும் இன்று முதல் ஊரடங்கு அமுலுக்கு

(UTV | கொவிட் – 19) – நாடளாவிய ரீதியில் இன்றிரவு 8 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என நேற்று(29) அரசு தெரிவித்திருந்தது.

அதற்கமைய, இன்று(30) இரவு 8 மணிக்கு அமுலாகும் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் திங்கட்கிழமை(04) காலை 5 மணி வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

வெள்ளிக்கிழமை மே தினம் என்பதனாலும், மே தினம் என்பது அரச, வர்த்தக விடுமுறை தினம் என்பதனாலும் திங்கட்கிழமை வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

கடந்த வாரமும் வார இறுதி நாட்களில் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

தேர்தல் சட்டத்தை மீறிய சம்பவம் – ஹரின் பெர்னாண்டோ கைது

editor

உதயங்க வீரதுங்கவுக்கு தொடர்ந்தும் விளக்கமறியல்

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை 671 ஆக உயர்வு