உள்நாடு

நாடளாவிய ரீதியில் இன்று இரவு முதல் ஊரடங்கு

(UTV | கொழும்பு) –  நாடளாவிய ரீதியில் தினமும், இரவு 10 மணி தொடக்கம், அதிகாலை 4 மணிவரை, இன்று (16) முதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்பட உள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

குறித்த இந்தக் காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை முன்னெடுக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், நேற்று (15) நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில், பொதுமக்கள் ஒன்றுகூடும் நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன், நாளை (17) நள்ளிரவு முதல் மறு அறிவித்தல்வரை, வீடுகளிலும், மண்டபங்களிலும், திருமண நிகழ்வுகளை நடத்த அனுமதி இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், உணவகங்களில் ஒரு சந்தர்ப்பத்தில் அதன் கொள்ளளவில், 50 சதவீதமானோருக்கு இடமளிக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 150 ஸ்மார்ட் மலசலகூடங்கள்

வாகன இறக்குமதிக்கு அனுமதி.

A/L பரீட்சை இன்று ஆரம்பம்- 346,976 பரீட்சார்த்திகள் தோற்றுகின்றனர்