உள்நாடு

நாடளாவிய ரீதியாக இன்றும் மின்வெட்டு

(UTV | கொழும்பு) – நாடளாவிய ரீதியாக இன்றும் (08) மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

அதனடிப்படையில், E மற்றும் F வலயங்களில் காலை 08 மணி முதல் மாலை 06 மணி வரையான காலப்பகுதியில் 05 மணித்தியாலங்களுக்கும் மாலை 06 மணி முதல் இரவு 11 மணி வரையில் இரண்டரை மணித்தியாலங்களுக்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

P,Q,R,S,T,U,V மற்றும் W ஆகிய வலயங்களில் காலை 09 மணி முதல் மாலை 05 மணி வரையான காலப்பகுதியில் 02 மணித்தியாலங்களுக்கும் மாலை 05 மணி தொடக்கம் இரவு 09 மணி வரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலத்திற்கும் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

இன்றைய(08) நாளுக்கான மின்வெட்டு நேர அட்டவணை;

Related posts

மிதக்கும் சூரியசக்தி மின் உற்பத்தி நிலையம் திறப்பு

தியத்தலாவ முகாமிலுள்ள மாணவர்கள் ஆரோக்கிய நிலையில் – இராணுவ ஊடகப் பேச்சாளர்

துஷான் குணவர்தனவுக்கு வெளிநாடு செல்ல தடை