கேளிக்கை

நயன்தாராவை நினைத்து திருமண பாட்டெழுதிய இயக்குநர்!

(UDHAYAM, COLOMBO) – பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராவுக்கும் காதல் என்று கடந்த சில வருடங்களாக கோலிவுட்டில் பேச்சு அடிபடுகின்றது.

இந்த கிசுகிசுவை இருவருமே மறுக்கவும் இல்லை, ஒப்புக்கொள்ளவும் இல்லை என்பதே இங்கு ஹைலைட்.

இந்நிலையில், நயன்தாரா பற்றி பாடலொன்றை விக்னேஷ் சிவன் எழுதியுள்ளதாக வெளியான தகவல்தான் கோலிவுட்டில் தற்போதைய ஹாட் டொப்பிக்காக பேசப்படுகின்றது.

விக்னேஷ் சிவன் இயக்கி வரும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ திரைப்படத்தில் திருமணம் குறித்த பாடல் ஒன்றை அவர் எழுதியுள்ளதாகவும், இந்த பாடலில் உள்ள வரிகள் அவருடைய சொந்த வாழ்க்கையின் பிரதிபலிப்பு போல இருப்பதாகவும் கூறப்படுகிறது.

ஒரு இனிமையான திருமண நிகழ்ச்சியை மனதில் வைத்து இந்த பாடலை எழுதியுள்ளதாக விக்னேஷ் சிவன் கூறியது நயன்தாராவுடனான காதலை உறுதி செய்வது போல் உள்ளது.

Related posts

ஆஸ்கர் விருது வழங்கும் விழா ஆரம்பம்

10ம் திகதி அஜித்தின் விஸ்வாசம் படம் ரிலீஸ் இல்லை?

தெலுங்கில் அறிமுகமாகும் வரலட்சுமி