உள்நாடு

நம்பர் முதல் மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை

(UTV | கொழும்பு) – தெரிவு செய்யப்பட்ட குழுவினருக்கு மூன்றாம் கட்ட தடுப்பூசி வழங்கும் நடவடிக்கைகளை எதிர்வரும் நவம்பா் மாதம் முதலாம் திகதிக்கு பின்னர் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

மூன்றாம் கட்ட தடுப்பூசியாக பைசர் தடுப்பூசியை வழங்க தீர்மானித்துள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தாா்.

அதற்கமைய, சுகாதார சேவைப் பிரிவினா், முப்படை வீரர்கள், பொலிஸ் அதிகாரிகள், சுற்றுலாத் துறை அதிகாரிகள் உள்ளிட்ட முதன்நிலை சேவையாளர்களுக்கு இந்த முன்றாம் கட்ட தடுப்பூசிகளை முதலில் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாகவும் இராணுவத் தளபதி குறிப்பிட்டாா்.

Related posts

போதகர் ஜெரோம் பெர்ணான்டோவுக்கு மில்லியன் கணக்கில் கிடைத்துள்ளது – சிஐடி

விடைத்தாள் மதிப்பீட்டுக்காக கவுன் அணிந்து வந்த ஆசிரியர்கள் – பாடசாலைக்குள் அனுமதிக்க மறுத்த அதிபர் – நடந்தது என்ன ?

editor

MSC MESSINA கப்பலில் தீப்பரவல்