அரசியல்உள்நாடு

நமது உன்னத நாட்டை உயிரை விடவும் மேலானதாக பாதுகாக்க வேண்டும் – சஜித் பிரேமதாச

நமது நாட்டில் பௌத்த மதத்திற்கும் புத்த சாசனத்துக்கும் விசேடம் இடம் கிடைத்துள்ளன.

இதனை அரசியலமைப்பு மற்றும் உச்ச சட்டம் மூலம் மேலும் உறுதிப்படுத்தப்பட வேண்டும். புத்த சாசனம், புத்த மதம் மற்றும் கலாச்சாரத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நம் அனைவரின் பொறுப்பும் கடமையும் ஆகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

வரலாற்று சிறப்பு மிக்க நவகமுவ தேவாலயத்தின் வருடாந்த பெரஹெரா நிகழ்வை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.

புனித கலசத்தை யானை மீது வைத்து எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு வீதி உலாவை ஆரம்பித்து வைத்தார்.

நமது நாட்டில் புத்தசாசன அமைச்சையும், புத்தசாசன நிதியத்தையும் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாச அவர்களே ஸ்தாபித்தார்.

இந்தக் கொள்கைகளைப் பின் தொடர்ந்து, பௌத்த மதத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு இன்றும் எதிர்காலத்திலும் நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டிருப்போம்.

நமது நாட்டில் பௌத்த மதத்திற்கான ஒரு அமைச்சும் சேவைகளும் இருப்பது போலவே பிற மதங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சமூகங்களுக்கும் அமைச்சுகளை உருவாக்கி பணிகளை முன்னெடுத்த யுகம் ரணசிங்க பிரேமதாசவின் காலத்தில் காணப்பட்டன.

நாட்டின் இறையாண்மை, நல்லிணக்கம், சமாதானம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு என்பன சகல இனம், மதம் மற்றும் கலாச்சாரத்தினிடையே காணப்படும் ஒற்றுமையின் மூலமே பாதுகாக்கப்படுகின்றன.

நமது உன்னத நாட்டை உயிரை விடவும் மேலானதாக பாதுகாக்க, புத்தரின் மதத்தையும், போதனைகளையும் பாதுகாக்க, எம்மால் செய்ய முடியுமான சகல நடவடிக்கைகளையும் அர்ப்பணிப்புகளையும் தியாகங்களையும் செய்வோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு

Related posts

இன்று முதல் Park & Ride பஸ் சேவை

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 207 பேர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பிள்ளையான் முன்கூட்டியே அறிந்திருந்தார் – அமைச்சர் ஆனந்த விஜேபால

editor