உள்நாடு

தொடர்ந்தும் மழையுடனான காலநிலை

(UTV | கொழும்பு) –   மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழையும் மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 100 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டின் ஏனைய பகுதிகளில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன் மத்திய மலைகளின் மேற்கு சரிவுகளிலும் தென் மாகாணத்திலும் அவ்வப்போது மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசும். சூறாவளி (40-45) வரை வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையுடன் கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுவதாகவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பாராளுமன்றத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள வேலையற்ற பட்டதாரிகளைச் சந்தித்தார் சஜித் பிரேமதாச

editor

அனைத்து பல்கலைக்கழகங்களதும் மீள் ஆரம்பம் ஒத்திவைப்பு

இலங்கையில் அதிகரிக்கும் கொரோனா