விளையாட்டு

தொடரை கைப்பற்றியது இந்தியா

(UTV|இந்தியா) – இந்திய மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான மூன்றாவது மற்றும் தீர்மானமிக்க போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுக்களினால் வெற்றி பெற்றுள்ளது.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற அவுஸ்திரேலிய அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி அவுஸ்திரேலிய அணி 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 286 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

அவ்வணி சார்பாக ஸ்டீவ் ஸ்மித் 131 ஓட்டங்களையும், லபுஸ்சாக்னே 54 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இந்நிலையில் 187 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் ரோஹித் சர்மா 119 மற்றும் விராட் கோலியின் 89 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

இதன் மூலமாக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

போட்டியின் ஆட்டநாயகனாக ரோஹித் சர்மா தெரிவானதோடு, தொடரின் நாயகனாக இந்திய அணித்தலைவர் விராட் கோலி தெரிவுசெய்யப்பட்டமை குறிப்பிடதக்கது

Related posts

நாமல் உள்ளிட்ட இலங்கை கிரிக்கெட் சபைத் தலைவர் உள்ளிட்டோருக்கு அறிவிப்பு

T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று

வைரலாக பரவும் ஹர்பஜனின் வீடியோ… (VIDEO)