உள்நாடு

தையிட்டி விகாரை – காணிப் பிரச்சினை தீரும் வரை புதிய கட்டுமானங்கள் கிடையாது – விகாராதிபதி உறுதி

தையிட்டி விகாரை விவகாரத்தில் நிலவும் சர்ச்சைக்களுக்குத் தீர்வு எட்டப்படும் வரை, விகாரை வளாகத்தில் எவ்விதமான புதிய கட்டுமானப் பணிகளும் முன்னெடுக்கப்படமாட்டாது என தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின்தோட்டை நந்தாராம தேரர் தெரிவித்துள்ளார்.

தையிட்டியில் உள்ள விகாராதிபதி வாசஸ்தலத்தில் நேற்று (30) (செவ்வாய்க்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை உறுதிப்படுத்தினார்.

முக்கிய விடயங்கள்:

புதிய கட்டுமானங்கள் நிறுத்தம்: விகாரை அமைந்துள்ள தனியார் காணிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொள்ள அரசாங்கத்தினால் புதிய குழுவொன்று அமைக்கப்பட்டுள்ளது.

அந்தக் குழுவின் விசாரணை முடிவடையும் வரை புதிய கட்டுமானங்களை மேற்கொள்ளப்போவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விசேட பூஜைகளுக்கு அனுமதி இல்லை: எதிர்வரும் 3ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் வழக்கமான வழிபாடுகள் மட்டுமே நடைபெறும். தெற்கிலிருந்து புத்தர் சிலைகள் கொண்டுவரப்படுவதாகவோ அல்லது விசேட பெரஹராக்கள் நடத்தப்படுவதாகவோ வெளியாகும் செய்திகளில் உண்மையில்லை. இவ்வாறான விசேட நிகழ்வுகளுக்கு தான் அனுமதி வழங்கவில்லை என விகாராதிபதி தெளிவுபடுத்தினார்.

சட்ட ரீதியான முடிவு: “காணி தொடர்பான ஆவணங்களை நாம் அரசாங்கக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளோம். காணி உரிமையாளர்களும் தமது ஆவணங்களை வழங்கியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் இது சட்டவிரோதமானது எனத் தீர்ப்பளிக்கப்பட்டால், அதனை ஏற்க நான் தயாராக இருக்கிறேன்,” என அவர் மேலும் தெரிவித்தார்.

அரசியல் நோக்கங்களுக்காகக் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும், சட்ட ரீதியான விசாரணைகளுக்கு மதிப்பளிப்பதே தற்போதைய நிலைப்பாடு எனவும் அவர் இதன்போது வலியுறுத்தினார்.

Related posts

அமைச்சுக்களுக்கான செயலாளர்கள் நியமனம்

சீனாவிலிருந்து வரும் பயணிகளுக்கு விமான நிலையத்தில் விசேட சோதனை

நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் சஜித் பிரேமதாச வெளியிட்ட தகவல்

editor