அரசியல்உள்நாடு

தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது – அரசாங்கம் பயந்து கொண்டு இழுத்தடிக்கிறது – எம். ஏ சுமந்திரன்

ஜனாதிபதி தேர்தலில் கூட அநுரகுமார திசாநாயக்க 50 சதவீதம் பெற்றிருக்கவில்லை. 42 சதவீதம் தான் அவர் பெற்றிருந்தார்.

முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதம் குறைவான வாக்குகளை பெற்று ஜனாதிபதியானவர் அவர் தான் என தமிழரசுக் கட்சியின் பதில் பொது செயலாளர் எம். ஏ சுமந்திரன் தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பகுதியில் இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பில் விசேட செய்தியாளர் சந்திப்பில் இன்று (14) மாலை  கருத்து தெரிவிக்கும்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது

கிழக்கு மாகாண தேர்தல் நடைபெறுவதற்கான சாத்தியம் உள்ளது.

ஆனால் அரசாங்கம் தேர்தலை சந்திப்பதற்கு பயந்து கொண்டு இதனை இழுத்தடிப்பதாக எமக்கு தோன்றுகிறது.

தற்போதைய அரசாங்கத்திற்கு ஏதோ ஒரு வகையில் 2/3 பெரும்பான்மை பாராளுமன்றத்தில் கிடைத்துவிட்டது.

ஜனாதிபதி தேர்தலில் கூட அநுரகுமார திசாநாயக்க 50 சதவீதம் பெற்றிருக்கவில்லை
42  சதவீதம் தான் அவர் பெற்றிருந்தார்.

முதல் தடவையாக இலங்கை வரலாற்றில் 50 சதவீதத்துக்கு குறைவான வாக்குகளை பெற்று ஜனாதிபதியானவர்  அவர் தான்.

அவர் ஜனாதிபதியான பின்னர் ஓர் அலை உருவானது. அதிலிருந்து ஏதோ ஓர் அடிப்படையில் 2/3 பெரும்பான்மை அவர்களுக்கு கிடைத்து விட்டது

ஆனால் இன்று அரசாங்கத்துக்கு   ஆரம்பத்தில் வாக்களித்த மக்கள் கூட இன்று தாங்கள் பிழையானவர்களைத் தெரிவு செய்து விட்டோம் என்ற ஒரு மனநிலையில் உள்ளனர்.

இந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இந்த மக்களின் நிலைப்பாடு தெளிவாக விளங்கியுள்ளது.

எங்களது கட்சியும்  கூட இந்த உள்ளுராட்சி தேர்தலில் எழுச்சி கண்ட நிலையில் காணப்படுகிறது.

எனவேதான் அவர்கள் மாகாண சபை தேர்தலை நடத்தி விட்டு அதில் தோல்வியடைந்தால் என்ன செய்வது என்று வெட்கப்படுகிறார்கள்.

அதனால்தான் என்னவோ  அதனை நடத்தாமல் இருக்கிறார்கள்.

தேர்தலுக்கு பயந்து தேர்தலில் மக்களுக்கு முகம் கொடுப்பதற்கு பின்வாங்கிக் கொண்டு தேர்தலை பிற்போடுவது ஒரு முறையற்ற ஒரு செயற்பாடாகும் என தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்  என்றார்.

-பாறுக் ஷிஹான்

Related posts

பெக்கோ சமனின் நெருங்கிய கூட்டாளிக்கு விளக்கமறியல்

editor

மொரட்டுவ உணவக தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைது

வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் இலங்கை உயர் கல்வித் துறையில் முதலீடுகளை மேற்கொள்ள வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்