அரசியல்உள்நாடு

தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் – ரிஷாட் எம்.பி

மக்களின் எதிர்பார்ப்பான ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான உண்மைகளை ஓரிரு தினங்களுக்குள் வெளிப்படுத்த வேண்டும் என மக்களின் எதிர்பார்ப்பாக காணப்படுகிறது என பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

திருகோணமலை நிலாவெளி பகுதியில் இன்று (17) மாலை இடம் பெற்ற மக்கள் சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் தெரிவிக்கையில் தேர்தல் காலத்தில் அரசாங்கம் சொன்னதை போன்று செயற்பட வேண்டும் அநியாயமாக கைதான வர்களை விடுவிக்கப்பட்டு சரியான விமோசனம் கிடைக்க வேண்டும் என நாங்கள் நம்புகின்றோம்.

குச்சவெளி பிரதேசத்தில் ஒன்று பட்டு ஒற்றுமையாக வாக்களித்தால் மக்கள் காங்கிரஸின் ஊடாக அதிகளவான ஆதரவை பெற்றுக் கொள்ளும் என நம்புகிறோம்.

தமிழ் முஸ்லீம் மக்களின் ஒற்றுமை ஊடாக பிரதேச சபை ஆட்சியை அமைக்கலாம் என்றார்.

Related posts

தபால் மூலம் வாக்களிக்கும் விண்ணப்பங்களை ஒன்லைனிலும் சமர்ப்பிக்கலாம்

இலங்கை பத்திரிகை ஸ்தாபன பணிப்பாளர் சபை உறுப்பினராக செந்தில் வேலவர் நியமனம்!

editor

செல்லாக்காசுகளை விலைக்கு வாங்குமளவுக்கு ரணிலின் நிலை -செப்டம்பர் 22 இல் அரசியல் மௌனித்து விடும் – ரிஷாட் எம்.பி உறுதி

editor