சூடான செய்திகள் 1

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள கோரிக்கை

(UTV|COLOMBO)  வாக்காளர் பெயர் பட்டியலை புதுப்பிப்பதற்கான விண்ணப்பப்படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து கிராம உத்தியோகத்தர்களுக்கு அனுப்பிவைக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க இந்த கோரிக்கையை பொதுமக்களுக்கு விடுத்துள்ளார்.

குறித்த விண்ணப்பத்தில் கோரப்பட்டுள்ள தகவல்களை உரிய வகையில் பூர்த்தி செய்து அனுப்புமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீதிமன்றத்தினாலோ அல்லது பாராளுமன்றத்திலோ, மாகாண சபை தேர்தல் நடத்தப்படுவது தொடர்பான பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் பட்சத்தில் உடனடியாக அந்த தேர்தலை நடத்த முடியும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னநாயக்க தெரிவித்துள்ளார்.

Related posts

இன்று(16) பயண கட்டணங்களை குறைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

ஆசிய உலக பொருளாதார மாநாட்டில் பிரதமர் இன்று உரை

திடீரென பற்றி எரியும் வனப்பகுதி