உள்நாடு

தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்துள்ள விசேட அறிவிப்பு

(UTV|கொழும்பு) – கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ள அனைத்து கட்சியினரும் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்களை எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.

தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் கிடைக்கப்பெற்றதன் பின்னர் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசியப் பட்டியல் உறுப்பினர்களின் பெயர் விபரங்கள் நேற்று தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

ஜனாதிபதி பதவி விலகினால் பிரதமர் பதவியை ஏற்கத் தயார்

ISIS அமைப்பிற்கு ஆதரவளித்த இலங்கையர்கள் : அமெரிக்கா குற்றச்சாட்டு

இன்றும் நாட்டில் பலத்த மழை