சூடான செய்திகள் 1

தேசிய மின் கட்டமைப்பிற்கு களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரம்

(UTV|COLOMBO)-மொரகஹகந்த களுகங்கை செயற்திட்டத்தினூடாக 25 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்புடன் ஒன்றிணைக்கும் வரலாற்று முக்கியத்துவமான நிகழ்வு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் ஆரம்பித்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மகாசங்கத்தினர் உள்ளிட்ட ஏனைய மதத் தலைவர்கள், சபாநாயகர் கரு ஜயசூரிய, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, காமினி ஜயவிக்கிரம பெரேரா, மஹிந்த அமரவீர, ரஞ்சித் சியம்பலாபிட்டிய, ஜோன் அமரதுங்க, மஹிந்த சமரசிங்க, இராஜாங்க அமைச்சர் வீரகுமார திசாநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்க உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளும் ஆளுநர்கள், வெளிநாட்டு தூதுவர்கள் உள்ளிட்ட அதிதிகளும் மகாவலி அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் அநுர திசாநாயக்க, மகாவலி பணிப்பாளர் நாயகம் சரத் சந்திரசிறி விதான உள்ளிட்ட அதிகாரிகளும் பங்குபற்றினர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

நீர்த்தேக்கத்தின் வான்கதவுகள் திறப்பு-மக்கள் அவதானம்

பிரபல பாடகர் அமல் பெரேரா உட்பட 3 பேர் விடுதலை

குணமடைந்தோர் எண்ணிக்கை 97 ஆக அதிகரிப்பு