அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினருக்கு பிணை!

ஹிங்குராக்கொட பொலிஸ் நிலையத்துக்குள் குழப்பமான முறையில் நடந்து கொண்டு பொலிஸ் அதிகாரிகளை அச்சுறுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஹிங்குராக்கொட தேசிய மக்கள் சகதியைச சேர்ந்த பிரதேச சபை உறுப்பினரை தலா 200,000 ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க ஹிங்குராக்கொட நீதிவான் செவ்வந்தி சொய்சா நேற்று (5) உத்தரவிட்டார்.

இதனையடுத்து, கே.டபிள்யூ.எஸ். சமன் உதய குமார என்பவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

பிணை வழங்கிய நீதிவான், சாட்சிகளை பாதிக்க வேண்டாம் என்றும் விசாரணைகளுக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் சந்தேக நபருக்கு உத்தரவிட்டார்.

Related posts

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள் சிலருக்கு இடமாற்றம் மற்றும் நியமனங்கள்

editor

அத்தியாவசிய உணவு பொருட்கள் தொடர்பான வர்த்தமானி

இன்றும் மின்வெட்டு அமுலுக்கு