அரசியல்உள்நாடு

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட எம்.பியைக் கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு!

தேசிய மக்கள் சக்தி கட்சியின் புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹானை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிலாபம் நீதிவான் நீதிமன்றம் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.

ஆராச்சிகட்டுவ பிரதேச சபையின் முன்னாள் தலைவர் ஜகத் சமந்தவின் வீட்டுக்கு ஏற்பட்ட சேதம் தொடர்பாக சிலாபம் நீதிவான் நீதிமன்றத்தில் ஜூலை 24 இல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நாடாளுமன்ற உறுப்பினர் நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த விடயம் குறித்து கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் கிஹான், நேற்று (24) நாடாளுமன்ற அமர்வில் கலந்து கொண்டதால் நீதிமன்றத்திற்கு வர முடியவில்லை என்று தெரிவித்தார்.

இது குறித்து எதிர்காலத்தில் தனது வழக்கறிஞர் நீதிமன்றத்துக்கு அறிவிப்பார் என்றும் அவர் மேலும் கூறினார்.

Related posts

குவைத்திலிருந்து 460 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்

ஜூலை முதல் விசேட பொலிஸ் நடவடிக்கை ஆரம்பம்!

கொரோனாவின் வீக்கத்தினால் இன்று 201 நோயாளிகள்