அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

தேசிய மக்கள் சக்தி எம்.பிக்களின் கொடுப்பனவுகள் ஒரே வங்கிக் கணக்கில் வைப்பு – பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

தேசிய மக்கள் சக்தியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களின் கொடுப்பனவுகளும் ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்படும் என்று பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

நிஹால் கலப்பத்தியுடன் ஆரம்பமான பயணத்தை தாங்கள் தொடர்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

பொரளையில் உள்ள மக்கள் வங்கியில் உள்ள தற்போதைய வங்கிக் கணக்கில் தொடர்புடைய கொடுப்பனவுகள் வைப்பிலிடப்படும் என்றும், பின்னர் அந்தப் பணம் பொது சேவைக்குப் பயன்படுத்தப்படும் என்று கூறிய பிரதி அமைச்சர், இது மக்களுக்கு மேலும் சேவை செய்வதற்கான வாய்ப்பை உருவாக்கும் என்றும் குறிப்பிட்டார்.

Related posts

“கூட்டுறவுத் துறை சார்ந்த பிரச்சினைகள் எதிர்வரும் 03 மாதத்துக்குள் தீர்க்கப்படும்”

தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து செல்வதில் பிரச்சினைகள் இல்லை

கோப் குழு செவ்வாயன்று கூடுகின்றது