உள்நாடுபிராந்தியம்

தேசிய மக்கள் சக்தியின் பிரதேச சபை உறுப்பினரின் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு

வெலிகம உடுகாவ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் வெலிகம பிரதேச சபை உறுப்பினர் சட்டத்தரணி, தாரக நாணயக்காரவின் வீட்டை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை 4.40 மணியளவில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த அடையாளம் தெரியாத இருவர் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றனர்.

குறித்த பிரதேச சபை உறுப்பினருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருந்த நிலையில், அவரின் வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பையும் பெற்றிருந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

வீட்டின் வாயிலை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும், இதனால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் மீதும் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ள போதும், அவர்கள் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related posts

புதிய கூட்டணியுடன் இணைய தயார் – சஜித்

உலகின் முதல் புதிய முகக்கவசங்கள் அடுத்த வாரங்களுக்குள்

ஆண்டு 6 பெண் மாணவிகளுக்கான HPV தடுப்பு மருந்து வழங்கப்பட்டது

editor