அரசியல்உள்நாடு

தேசியப் பட்டியல் விவகாரம் – ரவி கருணாநாயக்கவின் இல்லத்திற்கு பாதுகாப்பு

முன்னாள் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவின் பத்தரமுல்லையில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்திற்கு வெளியே பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலைத் தொடர்ந்து புதிய ஜனநாயக முன்னணிக்கு ஒதுக்கப்பட்ட இரண்டு தேசியப் பட்டியல் ஆசனங்களில் ஒன்றிற்கு கருணாநாயக்கவின் பெயரை தேர்தல்கள் ஆணைக்குழு நேற்று வர்த்தமானியில் வெளியிட்டது.

இந்நிலையில் அவரது பெயர் வர்த்தமானியில் வெளியிடப்பட்டமைக்கு எதிர்ப்புகள் வெளியாகிவரும் நிலையில்,இந்த பாதுகாப்பு போடப்பட்டிருப்பதாக தெரியவருகிறது.

Related posts

பாராளுமன்றம் நள்ளிரவுடன் கலைப்பு

“கிழக்கிலிருந்து சிங்கள மக்களை விரட்ட திட்டம்” அம்பிட்டிய தேரர்

இரா.சாணக்கியன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஸ்கொட்லாந்திற்கு விஜயம்