உள்நாடு

தேசபந்து தென்னகோன் சார்பான சாட்சியமளிப்பு முடிந்தது!

பணி இடைநிறுத்தப்பட்டுள்ள தேசபந்து தென்னகோன் சார்பாக 15 சாட்சிகள் சாட்சியமளிக்க திட்டமிடப்பட்டிருந்தாலும் அவர்களில் ஏழு பேர் மட்டுமே சாட்சியமளித்தனர்.

தேசபந்து தென்னகோன் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆர்.எஸ். வீரவிக்ரம எண்மரை விசாரிக்கப் போவதில்லை என்று தெரிவித்ததையடுத்து, மீதமுள்ள எட்டு சாட்சிகளை நேற்று (25) விசாரணைக்குழு விடுவித்தது.

அதன்படி, தேசபந்து தென்னகோனின் சாட்சிப் பட்டியலில் உள்ள சாட்சிகளின் சாட்சியமளிப்பு நேற்றுடன் முடிவடைந்தது.

விசாரணைக்குழு அடுத்த மாதம் முதலாம் திகதி மீண்டும் கூடவுள்ளது.

தேசபந்து தென்னகோன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் உயர் நீதிமன்ற நீதிபதி பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூவர் கொண்ட குழு நேற்றுக் (25) காலை நாடாளுமன்ற வளாகத்தில் கூடியது.

Related posts

வகுப்பு பகிஷ்கரிப்பில் ஈடுபட்ட பேராதனைப் பல்கலைக்கழக மாணவர்கள்!

கஞ்சாவுடன் பொலிஸ் அதிகாரி ஒருவர் கைது

அரசாங்க அச்சக திணைக்களத்துக்கு விசேட பாதுகாப்பு