அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1விசேட செய்திகள்

தேசபந்துவை பதவி நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர ஒப்புதல்

தேசபந்து தென்னகோனை பொலிஸ்மா அதிபர் பதவியில் இருந்து நீக்கும் கடிதத்திற்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க ஒப்புதல் அளித்துள்ளார்.

தேசபந்து தென்னகோனை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக நேற்று (05) பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின்படி சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன இந்தக் கடிதத்தை சமர்ப்பித்தார்.

அதற்கமைய தேசபந்து தென்னகோனை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார்.

அரசியலமைப்பு சபை பொலிஸ் மா அதிபர் பதவிக்கு ஜனாதிபதி ஒருவரை பரிந்துரைத்ததைத் தொடர்ந்து, பெரும்பான்மை ஒப்புதலின் அடிப்படையில் புதிய பொலிஸ் மா அதிபர் நியமிக்கப்படுவார்.

Related posts

வடக்கு பிரதேச மரம் நடுகை விழா!

ரஜரட்ட ரெஜின தடம்புரள்வு

ஆவா குழுவின் இரண்டாம் நபராக செயலாற்றிய ஒருவர் கைது