சூடான செய்திகள் 1வணிகம்

தேங்காய் எண்ணெய் தயாரிக்கும் -விற்பனை செய்யும் இடங்கள் இன்று(18) முதல் விசேட பரிசோதனைக்கு.

(UTV|COLOMBO) தேங்காய் எண்ணெய் தயாரிக்கும், விற்பனை செய்யும் இடங்களை இன்று(18) முதல் விசேட பரிசோதனை செய்யவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

தரமற்ற ரீதியில் தேங்காய் எண்ணெய் விற்பனை செய்யப்படுவதாக கிடைக்கப் பெறும் தகவல்களுக்கு அமையவே இந்த பரிசோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் செயலாளர் மஹேந்திர பாலசூரிய தெரிவித்துள்ளார்.

இந்த பரிசோதனை நடவடிக்கையின் போது பெற்றுக்கொள்ளப்படும் மாதிரிகளின் இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கமைய மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே தரமற்ற தேங்காய் எண்ணெய் விற்பனை அல்லது விநியோகம் தொடர்பிலானத் தகவல்களை குறித்த பிரதேசங்களிலுள்ள பொது சுகாதார பரிசோதகர்கள் அலுவலகத்துக்கு தெரிவிக்குமாறும் பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

நெல் கொள்வனவு வேலைத்திட்டம்

மத்திய கிழக்கு நாடுகளில் பணியாற்றுகின்ற இலங்கையர்களின் வருமானம் சரிவு

பிரதமர் பதவியை ஏற்காமல் பயந்து ஓடுவது நல்லதா? கெட்டதா?