உள்நாடு

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூட்டு சம்பவம் – ஒருவர் கைது

தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ய முயன்ற சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 18 அன்று, தெஹிவளை ரயில் நிலையத்திற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு அடையாளம் தெரியாத நபர்கள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில், ஒருவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

கல்கிஸ்ஸ குற்றப் புலனாய்வுப் பிரிவின் விசாரணையின் பின், துப்பாக்கிச் சூட்டுக்கு வந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரிடமிருந்து 50 கிராம் ஐஸ் போதைப்பொருள், ஐந்து வாள்கள் மற்றும் ஒரு கத்தி ஆகியவை மீட்கப்பட்டுள்ளன.

அவர், கல்கிஸ்ஸ சீவலி வீதிப் பகுதியில் வசிக்கும் 34 வயதுடையவர் என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related posts

கலால் வரி சட்டங்களை மீறிய 1,320 பேர் கைது – அனுமதிப்பத்திரம் பெற்ற 3 விற்பனை நிலையங்களுக்கு சீல்

editor

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான 22 வது நபர் அடையாளம்

தந்தை செலுத்திய லொறியின் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி

editor