தெற்கு அதிவேக வீதியில் கொட்டாவையில் இருந்து பயணித்த லொறி ஒன்று, தடுப்பு வேலிகளில் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளது.
குருந்துகஹஹெத்கம பகுதியிலேயே இந்த விபத்து நேர்ந்துள்ள நிலையில், குறித்த லொறி தீப்பற்றியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தில் மூன்று பேர் காயமடைந்த நிலையில் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.