சூடான செய்திகள் 1

தெமடகொடயில் வெடிப்புச் சம்பவம்

(UTVNEWS | COLOMBO) – தெமடகொட, மஹவில கார்டன் பகுதியில் உள்ள வீடொன்றில் வெடிப்புச் சம்பவம் ஒன்றில் இரு பெண்கள் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

இன்று(15) காலை 8.45 மணி அளவில் இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றதற்கான காரணம் இதுவரையில் இனங்காணப்படவில்லை எனவும், சம்பவம் தொடர்பில் தெமடகொட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் மேலும் தெரிவித்திருந்தார்.

Related posts

டொன் பிரியசாதின் உயிரிழப்பை உறுதிப்படுத்திய பொலிஸார்!

Shafnee Ahamed

சம்மாந்துறை கரங்காவட்டை காணிப்பிரச்சினை அரச அதிபருக்கும் அமைச்சர் ரிஷாட்டுக்குமிடையிலான பேச்சில் சாதகம்

தாமரை கோபுரத்தின் ரூ.02 பில்லியனிற்கு என்ன நடந்தது – ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிக்கை