வகைப்படுத்தப்படாத

தென் பிலிப்பைன்ஸில் இடம்பெற்ற மோதலில் 19 பொதுமக்கள் பலி

(UDHAYAM, COLOMBO) – தென் பிலிப்பைன்ஸ் நகரான மின்டானோ பகுதியில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் குறைந்தது 19 பொதுமக்கள் கொல்லப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

கடந்த ஒரு வார காலமாக இடம்பெற்றுவரும் இந்த மோதல் சம்பவங்களில் இதுவரை 85 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

துப்பாக்கிதாரிகள் நகர வீதிகளில் தொடர்ந்தும் தாக்குதல்களில் ஈடுபட்டுவருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அவசர கால சட்டம், பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ரொட்ரிகோ டுட்டர்ட் தெரிவித்துள்ளார்.

அந்த பிராந்தியத்தில் அதிகரித்துவரும் மோதல் சம்பவங்களுக்கு ஐ.எஸ் தீவிரவாதிகள் காரணமாக இருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

பிலிப்பைன்ஸின் மாரவி பிரதேசத்தின் சில பகுதிகளை மெயூட் குழுவினர், தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவந்ததன் பின்னர் இந்த மோதல் சம்பவங்கள் அதிகரித்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

இந்தியாவில் 70-ஆவது குடியரசு தினம் இன்று..

தேர்தல் பிரச்சாரங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை

Fuel price reduced